Wednesday, September 7, 2016

ஈரம் தோய்ந்த  ஆடைகளும்
எடுத்து உதறுகையில்
 சாரல் மழை வீசும் 

Wednesday, July 10, 2013

அவளுடன் ஓர் அந்திப்பொழுது..




அந்தி மஞ்சள் ஒளியில் தவழும்

அழகிய வெண்ணிலா

என்னோடு,

விழியில் நாணம் விதைத்து

இதழில் புன்னகை சிந்தி

மௌனம் மலராய் மலர்ந்தது

அவளோடு,

ஐவிரல் கொண்டு ஐவிரல் பற்றி

தொடரும் பயணம் –இப்
பாரோடு,
பல வானவில் தோன்றி
வர்ணங்கள் பூசி
வாழ்க்கையும் இனிதானது
நடையோடு,
நேரமும் போனது
பயணமும் முடிந்தது- இரு
கைகளும் பிரிந்தன
மௌனமும் கலைந்தது
பாதைகள் மாறின
வெண்ணிலா போனதே
இரவோடு.

Friday, March 29, 2013

பல்கலைக்கழக நட்பு


பல்கலைக்கழக பயணம்ஆரம்பித்து
முதல் வருடத்திலேயே
சந்தித்த தோல்விகள்
முற்றுப்புள்ளியின்றி
தொடர்ந்தன ..
முற்றுகையிட்டிருந்த அமாவாசை
கைப்பற்றிக்கொண்டது
என் இரவுகளை மட்டுமல்ல
என் பகல்களையும் தான் ..
கதறிதுடித்தன
என் உணர்வுகள்
கண்டுக்கொள்ளவோ யாருமில்லை
அந்நேரம் ,,,
தூரத்தில்நீ
அருகில் வந்து
அழகிய எண்ணங்களால்
அலங்கரிக்கப்பட்ட
நட்புக்கரங்களை நீட்டினாய்
புது உணர்வு
என்னில் ஒரு புதுப்பொலிவு
வாழ்க்கை மறுபக்கமாய்
சுழன்றது..
அன்று
என் உணர்வுகளை ஏடுகளில்
கிறுக்கியபோது
கவிதை என்றானது .
இன்று
 
என் வாழ்க்கை புத்தகத்தின்
அழகான பக்கங்களும்
வாசிக்கப்படுகின்றன
கவிதைவடிவில்.

Monday, June 18, 2012

நிறைவேறாத ஆசைகள்...

மழைத்துளிகளாய் மாறி
மண்ணை சேர்ந்திட
ஆசைப்பட்டேன் -தடைகளாய்
மரங்களும் செடிகளும்
ஆங்காங்கே!

நதி நீராய் மாறி
கடலை சேர்ந்திட
ஆசைப்பட்டேன் - தடைகளாய்
காண்களும் கால்வாய்களும்
ஆங்காங்கே!

மின்மினிப்பூச்சியாய் மாறி
உலகை ஒளியூட்டிட
ஆசைப்பட்டேன் தடைகளாய்
சந்திரனும் சூரியனும்
ஆங்காங்கே!

நிறைவேறாத ஆசைகள்
நித்திரையில்
கனவுகளாகி போகையில்
தடைகளாய்
விடியற் சேவலின் கூவலும்
விடைப்பெற்றுக்கொண்ட இரவுகளின் சப்தங்களும்
அங்கே!

Monday, April 9, 2012

வானவில்


ஆகாய மேகங்கள்
அடி வானில்
கிறுக்கிய சித்திரங்கள்
அதுவே - என்
அடி மனதில்
சதா வந்து போகும்
என்னவளின் ஞாபகங்கள்

Saturday, February 18, 2012

காதல் வேதனை



முப்பொழுதும் மூழ்குகின்றேன்
போதையில் - ஆனாலும்
முடிவில்லாமல் தொடருதடி
 நீ தந்த
 காதல் வேதனை.

Wednesday, February 8, 2012

அன்னை


சுமையை தான்
 சுமந்து
பசுமையை எனக்கு
காட்டிய
அன்புள்ளம் கொண்டவள்
 என் அன்னை